Skip to main content

Narayani Stuti from Devi Mahatmyam

 

In Vedic dharma, divinities are based on natural forces of the Universe. 

‘nArAyaNi’ is the total internal energy of any matter form having two parts 

1. Not Interacting, Non-Usable energy that drives the ‘Entropy’ or ‘Information content’ or ‘buddhi’ (that drives Sarasvati) 

2. Interacting, Usable energy that drives interactions which create new matter forms (that drives Lakshmi). 

We invoke this nArAyaNi, the total internal energy in all matter forms and biological beings, which becomes the entropy/information content/buddhi and also the usable energy that drives the physical evolution.
Below is the tamil translation of the sloka.
புத்தி வடிவமாயிருந்து

புகுந்துள்ளதில்  வீற்றிருந்து
புலன் கடந்த நிலை தரும் தேவி
நாராயணி வணங்கினேன்

வெறும் வளி எங்கும் பரந்திடவே
பெரும் பரிணாமம் தந்திடவே
அகிலம் உன்னுள் அடங்கும் சக்தி
நாராயணி வணங்கினேன்

நலன்களில்   நன்மை நீயே
நற்சிவமாகி  நிறைந்தவளே
முக்கண்  புகலிடம் கௌரி 
நாராயணி வணங்கினேன்

ஆக்கி காத்து அழிவிக்கும்
அனைத்தனின் நித்யசக்தியே
குண ஆதாரமே, குணமான
நாராயணி வணங்கினேன்

எளியோரின்  போக்கிடமாய்
மீட்கின்ற அடைக்கலமாய்
வலி துயரம் அழிக்கும் தேவி
நாராயணி வணங்கினேன்

உள்ளிணைந்து எங்கும் பரவும்
உருவாக்கி பெருக்கும் வடிவினளே
அகிலயாக  அடித்தளம் தேவி
நாராயணி வணங்கினேன்

திரிசூலம் பிறை  நாகமொடு
நந்தி தாங்கும் நாயகியே
வடிவம் வாழும் மஹேஸ்வரியே
நாராயணி வணங்கினேன்

கதம்ப மயிலாய் சூழ்ந்திருந்து
களங்கமற்ற மகா சக்தியுடன்
குழந்தையாய் குடியிருப்பவளே
நாராயணி வணங்கினேன்


கதை சங்கு சக்ரமுடன்
சாரங்கம் ஏற்ற மஹாவீர
விஷ்ணு வடிவினில் வாழ்பவளே
நாராயணி வணங்கினேன்

பெரும் உக்கிர சக்ரம் தாங்கிய
தன் பற்களால் அகிலம் தூக்கிய
வராஹ வடிவினில் நிறைந்தவளே
நாராயணி வணங்கினேன்

உக்கிர நரசிம்ம வடிவத்தில்
வேட்கையுடன்  அழிவினை அழிக்கும்
மூவுலகை காத்து நிற்கும்
நாராயணி வணங்கினேன்

மின்னல் ஒளியே  கிரீடமாக
எண்ணற்ற ஊற்று கண்ணொளிர
இருள் அழிக்கின்ற ஐந்த்ரி
நாராயணி வணங்கினேன்

ஆற்றலின் அதிர்வு வடிவாகி
அழிவழிக்கும் பெரும் பலமே
பயங்கரமாய் ஆர்ப்பரிக்கும்
நாராயணி வணங்கினேன்

வாய் பிளந்து பற்கள் வெளிவந்து
தலைகள்  மாலையாய் அணிந்து
உத்வேகம்  ஒளிரும்  ஆட்டுவிக்கும்
நாராயணி வணங்கினேன்

திருமகள் கலைமகள் நிலையாக
சுயசக்தியால் ஊட்டம் தந்து
மாயை  வடிவான காரிருளே
நாராயணி வணங்கினேன்

கலைமகள் அறிவு வடிவானவளே
திருமகள் ஒளி இருள் ஆனவளே
கட்டுப்படுத்தி ஆளும் ஈஸ்வரியே
நாராயணி வணங்கினேன்

வடிவம்  அனைத்தும்  ஆள்பவளே
சக்தியாய் எங்கும் இருப்பவளே
பயங்களிருந்து காக்கும் தேவியே
துர்கா தேவி வணங்கினேன்

அழகு வடிவமாய் வாழ்பவளே
முக்கண் தரித்த நாயகியே
அனைத்துலகும் பாதுகாக்கும்
காத்யாயனி வணங்கினேன்

வெடித்து ஒளிரும் வடிவினளே
மீதமில்லாது தீமை அழிப்பவளே
பயம் போக்கும் திரிசூலியே
பத்திரகாளி வணங்கினேன்

Comments